தன் கணவனை அநியாயமாக சுட்டுக்கொன்ற ரஷ்யப் படைவீரரை நேருக்கு நேர் சந்தித்த உக்ரைன் பெண் சொன்ன வார்த்தைகள்
உக்ரைனில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீதான விசாரணை துவங்கியுள்ள நிலையில், ஒரு ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ரஷ்யப் போரில் முதல் போர்க்குற்றவாளியான Vadim Shishimarin (21) என்ற ரஷ்யப் படைவீரர், தான் Oleksandr Shelypov (62) என்னும் உக்ரைன் நாட்டவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதில் ஆச்சரியத்துக்குரிய விடயம் என்னவென்றால், கொல்லப்பட்ட Oleksandr, முன்னாள் சோவியத் யூனியனை தலைமையேற்று நடத்திய Leonid Brezhnev என்பவருடைய பாதுகாவலராக இருந்தவர் ஆவார். இந்த Leonid Brezhnev உக்ரைனில் பிறந்தவர்!
ரஷ்ய பாதுகாப்பு ஏஜன்சி என்று அழைக்கப்படும் உளவுத்துறையான KGBயின் உறுப்பினரான Oleksandr, Leonid Brezhnevஇன் பாதுகாவலராக ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.
அவர் எந்த KGB அமைப்பில் பணியாற்றினாரோ, அதே அமைப்பில் உளவாளியாக இருந்த புடினுடைய படைவீரர் ஒருவர் கையாலேயே Oleksandr கொல்லப்பட்டுள்ளதைப் பார்த்தால், இதுதான் விதியோ என எண்ணத் தோன்றுகிறது.
இராணுவத்தில் பணியாற்றிய பின் ஒரு ட்ராக்டர் சாரதியாக தன் வாழ்நாட்களை செலவிட்டு வந்த Oleksandr, உக்ரைன் போரின்போது சிதறடிக்கப்பட்ட ரஷ்யப் போர் வாகனம் ஒன்றை வேடிக்கை பார்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியே செல்ல, அவரது மனைவியான Kateryna Shelypova, வெளியே செல்லவேண்டாம் என்று கூறி அவருடன் சண்டை போட்டிருக்கிறார்.
ஆனால், எனக்கு ஒன்றும் ஆகாது, இதோ தெருமுனையில்தானே அந்த வாகனம் கிடக்கிறது, நான் போய் அதைப் பார்த்துவிட்டுத் திரும்ப வந்துவிடுகிறேன், அப்புறம் பார்க்கலாம் என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.
அவைதான் அவர் தன் மனைவியிடம் கடைசியாக பேசிய வார்த்தைகள்...
அந்த நேரத்தில் உக்ரைன் படைகள் தங்கள் போர் வாகனத்தைச் சிதறடித்ததால் அவர்களிடமிருந்து தப்பியோடிக்கொண்டிருந்த ரஷ்யப் படையினரில் ஒருவரான Vadim அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார்.
Oleksandr கையில் ஒரு மொபைல் வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ள Vadim, தாங்கள் எங்கே தப்பியோடுகிறோம் என்பதை அவர் உக்ரைன் இராணுவத்துக்குத் தெரிவித்துவிடுவாரோ என்று பயந்து, தன் மேலதிகாரியின் உத்தரவின் பேரில் அவரை சுட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விசாரணைக்காக Kyivஇல் அமைந்துள்ள நீதிமன்றம் ஒன்றிற்கு கொண்டுவரப்பட்ட Vadimஐ நேருக்கு நேராக சந்தித்துள்ளார் Oleksandrஇன் மனைவியான Kateryna.
39 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த தன் கணவர் அமைதியான ஒரு மனிதர் என்றும், அவரால் ரஷ்யப் படையினருக்கு எந்த ஆபத்தும் இல்லாத நிலையிலும், அவர்கள் அவரை அநியாயமாக கொன்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.
நான் என் கணவரைக் கொன்றவரைப் பார்ப்பதற்காக வெகுதூரத்திலுள்ள எங்கள் கிராமத்திலிருந்து வந்தேன். அவன் பார்ப்பதற்கு ஒரு சிறுபிள்ளையைப் போல இருக்கிறான். ஆனாலும், அவன் தான் செய்த தவறுக்கான தண்டனையை அடைவான். அவன் சிறையில் கிடந்து அழுகி நாறவேண்டும். தான் செய்ததை நினைத்து நினைத்து மீதமுள்ள தன் வாழ்நாட்களை அவன் கழிக்கவேண்டும் என்று கூறியுள்ளார் Kateryna.