ராஜ குடும்பத்திலேயே பிரபலமான நபர் யார்? இளவரசி கேட் இல்லையாம்
கேட் மிடில்டன் என்னும் கேத்தரின், 2011ஆம் ஆண்டு பிரித்தானிய இளவரசர் வில்லியமை திருமணம் செய்ததிலிருந்தே பிரித்தானியாவில் பிரபலமான ராஜ குடும்ப உறுப்பினராகத் திகழ்ந்தார்.
ஆனால், அந்த நிலை மாறியுள்ளதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ராஜ குடும்பத்திலேயே பிரபலமான நபர் யார்?
ஆம், YouGov அமைப்பின் ஆய்வு முடிவுகள், ராஜ குடும்பத்திலேயே பிரபலமான நபர் இளவரசர் வில்லியம் என தெரிவிக்கின்றன.
74 சதவிகித பிரித்தானியர்கள் இளவரசர் வில்லியம் தங்களுக்கு பிடித்த ராஜ குடும்ப உறுப்பினர் என தெரிவித்துள்ளார்கள்.
இளவரசி கேட் ராஜ குடும்பத்திலேயே பிரபலமானவர்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்தாலும், இரண்டாவது இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளார்.
பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர், இளவரசி ஆன். அதாவது, மன்னர் சார்லசின் சகோதரியான இளவரசி ஆன்.
அவர் பல ஆண்டுகளாகவே மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |