அலுவலக காதலில் இந்தியா இரண்டாம் இடம்: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா?
பணியிடத்தில் சக ஊழியருடன் காதல் கொள்வதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
11 நாடுகளில் ஆய்வு
அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட 11 நாடுகளில் ஆஷ்லே மேடிசன் யூகோவ் அலுவகத்தில் காதல் அல்லது டேட்டிங் செய்வது குறித்த ஆய்வை நடத்தியது. 
இந்த கணக்கெடுப்பு 13,581 பேரிடம் நடத்தப்பட்டது. அதன் முடிவில் வட அமெரிக்க நாடான மெக்சிகோ முதலிடம் பிடித்துள்ளது.
இங்கு பணிபுரிபவர்களில் 43 சதவீதம் பேர் சக ஊழியருடன் காதல் அல்லது டேட்டிங்கில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது.
இந்தியா இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு 40 சதவீதம் பேர் சக ஊழியருடன் நெருக்கமாக உள்ளனர்.
பணியிட உறவுகள் இந்தியாவில் நவீன அலுவலக கலாச்சாரத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாகவே உள்ளன என்று இந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
வாய்ப்புகள்
இந்தியர்களில் 10யில் 4 பேர் சக ஊழியருடன் டேட்டிங் செய்வதாக இந்த ஆய்வு கூறுகிறது. ஆனால் பெண்களை விட (36%) ஆண்களே (51%) அதிகம் டேட்டிங் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதே சமயம் அலுவலக உறவுகள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கலாம் என்பது குறித்து 34 சதவீதம் பேர் கவலை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் பெரும்பாலும் 18 முதல் 24 வயதுடைய இளைஞர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் இந்த எண்ணிக்கை 30 சதவீதமாக உள்ளதாக ஆய்வு கூறுகிறது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |