நடிகர் விஜயை விட இவர்கள் தான் துணிச்சலானவர்கள்! சீமான் பாராட்டு
மக்களுக்காக குரல் கொடுப்பதில் சூர்யா, சிம்புவிற்கு உள்ள சமூக பொறுப்பு மற்ற நடிகர்களுக்கு இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
வேலுநாச்சியாரின் 224ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று 25-12-2020 நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சீமான் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு நடிகள் நடிப்பதின் மூலம் மட்டுமே நாட்டை ஆள தகுதிவந்து விடுகிறது என்பதை நான் ஏற்கவில்லை, எங்களுடைய கோட்பாடு ஏற்கவில்லை.
தியாகங்களை திரைக்கவர்ச்சியில் மூடுவதை நாங்கள் ஒருபோதும் ஒத்துக் கொள்ள மாட்டோம்.
நடிகர் விஜய் மீது எனக்கு பேரன்பு உண்டு, அவர் எனது தம்பி. குறைந்தபட்சம் விஜய், சூர்யா அளவிற்காவது குரல் கொடுக்க வேண்டும், அவருடைய புகழ் வெளிச்சத்தில் மக்களுக்காக நிற்க வேண்டும்.
விஜய் உட்பட நடிகர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரட்டும், வந்து அரசியல் செய்ய வேண்டும், மக்களுக்காக போராடி, களத்தில் நின்று, மக்களின் நன்மதிப்பை பெற்று வர வேண்டும்.
வெறும் திரைக்கவர்ச்சியை மட்டும் வைத்துக்கொண்டு நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணத்தை அவர்கள் கைவிட வேண்டும் என தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இதை எனது தம்பி விஜய்-க்கும் சேர்த்து தான் செல்கிறேன். சூர்யா, சிம்புவிற்கு உள்ள சமூக பொறுப்பு, கோபம், அறச்சீற்றம் மற்ற நடிகர்களுக்கு இல்லை, அவர்களிடம் அச்சம் இருக்கிறது.
சூர்யா ஒரு பொதுபிரச்சினைக்காக குரல் கொடுக்கும் போது துணிந்து செயல்படுகிறார், பின்னடைவது இல்லை. இதை நான் கொண்டாடுகிறேன் பாராட்டுகிறேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.