சிறந்த நடிகர் சூர்யா! தேசிய விருதுகளை அள்ளிக் குவித்த தமிழ் படங்கள்
இந்திய திரையுலகின் உயரிய விருதான தேசிய விருதை 10 பிரிவுகளின் கீழ் தமிழ்ப் படங்கள் பெற்றுள்ளன.
2020ஆம் ஆண்டுக்கான 68வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகருக்கான விருதை சூரரைப் போற்று படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சூர்யா பெற்றார்.
அதே படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். சூரரைப் போற்று திரைப்படம் மொத்தம் 5 தேசிய விருதுகளை தட்டிச் சென்றது.
சூரரைப் போற்று சிறந்த படமாகவும், அந்த படத்தின் சிறந்த திரைக்கதைக்காக ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதா கொங்கராவும் தேசிய விருதை வென்றுள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் சூரரைப் போற்று படத்திற்கு சிறந்த பின்னணி இசை அமைத்ததற்காக தேசிய விருதை பெற்றார்.
சிறந்த வசனகர்த்தா: மடோனே அஸ்வின் (மண்டேலா)
சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது: மடோனே அஸ்வின் (மண்டேலா)
சிறந்த துணை நடிகை: லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)
சிறந்த படத்தொகுப்பாளர்: ஸ்ரீகர் பிரசாத் சிறந்த தமிழ்ப்படம்: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்