சூர்ய குமார் யாதவ் மிகப்பெரிய அச்சுறுத்தல்: கதிகலங்கும் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர்
சூர்ய குமார் யாதவ் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்.
திறமை மீது அதிக கவனம் செலுத்தி சிறப்பாக விளையாட முயற்சிப்போம்.
இந்திய அணியுடனான அரையிறுதிப் போட்டியில் சூர்ய குமார் யாதவ் எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை போட்டிகளில் லீக் சுற்றுகள் நிறைவடைந்து இன்று முதல் அரையிறுதி போட்டிகள் தொடங்கவுள்ளன.
இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன, அதைப்போல நாளை அடிலெய்டில் நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில், நாளை இந்தியாவுடன் நடைபெறும் அரையிறுதி போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பிபிசி-க்கு அளித்த பேட்டியில், எங்களுக்கு இந்திய அணியில் சூர்ய குமார் யாதவ் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என கருதுவதாக தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் எது அச்சுறுத்தலாக உள்ளது என பேட்டியாளர் கேட்ட கேள்விக்கு, நிச்சயமாக சூர்ய குமார் யாதவ் அச்சுறுத்தலாக இருப்பார், ஏனென்றால் அவர் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார் என தெரிவித்தார்.
அத்துடன் இந்திய அணியில் பல சிறப்பான வீரர்கள் உள்ளனர், அவர்கள் அனைவரையும் எதிர்கொள்ள எங்களை சிறப்பாக தயார்ப்படுத்தி வருவதாகவும், எங்களது திறமை மீது அதிக கவனம் செலுத்தி சிறப்பாக விளையாட முயற்சிப்போம் என்றும் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: 20 வருடங்களுக்கு முன்பு நாங்கள் ஒட்டி பிறந்தோம்: ஆனால் இப்போது?
நெகிழும் இரட்டை சகோதரிகள் இந்திய அணியை வீழ்த்த எதை இலக்காக வைப்பீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள், பந்து வீச்சோ அல்லது பேட்டிங்கோ நாங்கள் சிறந்த பதிலடி கொடுப்போம் என ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.