CSK அணிக்கு எதிராக நாளை கண்டிப்பாக வெல்வோம் - சூர்யகுமார் யாதவ்

Sivaraj
in கிரிக்கெட்Report this article
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நாளைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெறும் என அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
CSK vs MI
ஐபிஎல் 2025 சீசனில் நாளைய போட்டியில் CSK மற்றும் MI அணிகள் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூர்யகுமார் யாதவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட்டும் தலைமை தங்குகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சூர்யகுமார் யாதவ், "நாளைய போட்டியில் ஹர்திக், பும்ரா விளையாடாதது அணிக்கு சவாலானதுதான். ஆனால், அதை சமாளிக்கும் அளவிற்கு அணியில் வீரர்கள் தயாராக உள்ளனர்" என்றார்.
கண்டிப்பா வென்றுவிடுவோம்
தோனியை சமாளிக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், "இத்தனை ஆண்டுகளில் அவரை யாராவது சமாளிக்க முடிந்ததா?" என சிரித்துக் கொண்டே கூறினார்.
அதேபோல், 2013யில் இருந்து முதல் போட்டியில் மும்பை அணி வென்றதே இல்லையே என்ற கேள்விக்கு, "நீங்கள் சொல்லிட்டீங்கல., நாளைக்கு கண்டிப்பா வென்றுவிடுவோம்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |