பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்.,சூர்யகுமார் யாதவ் கூறிய விடயம்
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்காக அனைவரும் உற்சாகமாக இருப்பதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
அபார வெற்றி
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் சக அணி வீரர்களை வெகுவாக பாராட்டினார்.
அவர் வெற்றி குறித்து கூறியபோது, "வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தைப் பார்க்க முடிந்தது. நாங்கள் எதிர்பார்த்த நல்ல அணுகுமுறை மற்றும் ஆற்றல் எங்களுக்கு கிடைத்தது.
சமீபத்தில் சாம்பியன்ஸ் ட்ராபிக்காக நிறைய வீரர்கள் இங்கு வந்தனர். விக்கெட் நன்றாக தெரிந்தது. ஆனால் அது மெதுவாக இருந்தது மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு முக்கிய பங்கு இருந்தது" என்றார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்காக
மேலும் வீரர்கள் குறித்து அவர் கூறுகையில், "குல்தீப் சிறப்பாக செயல்பட்டார். ஹர்திக், துபே மற்றும் பும்ரா ஆகியோரிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்தது. அபிஷேக் தற்போது உலகின் முதல் வீரர் என்பதற்கான காரணத்தை காட்டியிருக்கிறார்.
அவர் ஒரு தொனியை அமைத்துக் கொள்கிறார்.
200 ஓட்டங்களாக இருந்தாலும், 50 ஓட்டங்களாக இருந்தாலும் சேஸிங்கின்போது அவரது ஆட்டம் நம்பமுடியாததாக இருக்கும்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்காக அனைவரும் உற்சாகமாக உள்ளனர்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |