என் பலம் எனக்கு நல்லாவே தெரியும் - சூர்யாகுமார் யாதவ்
என் பலம் என்ன என்பது எனக்கு நன்கு தெரியும் என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் பேட்டி
தற்போது, 16-வது ஐபிஎல் தொடர் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இப்போட்டியில், வீரர் சூர்யகுமார் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 29 பந்துகளில் 55 ஓட்டங்களை எடுத்து அசத்தினார்.
மேலும், ஐசிசி டி20 ஆண்களுக்கான துடுப்பாட்டம் தரவரிசையில் இந்தியா கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். இந்தியாவின் முதல் 10 இடங்களுக்குள் இவர் ஒருவராகவும் உள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் வீரர் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், போட்டியில் என்ன செய்ய நினைக்கின்றோமோ, அதைத்தான் பயிற்சியிலும் செய்ய வேண்டும். ஓட்டங்கள் எங்கும் கிடைக்கும், என் பலம் என்ன என்பது எனக்கு நன்றாகவே தெரியும். வேறு எதையும் வித்தியாசமாக நான் செய்தது கிடையாது என்றார்.