இலங்கைக்கு எதிரான போட்டி..கோலியின் சாதனையை தூளாக நொறுக்கிய சூர்யகுமார்
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை படைத்தார்.
Pallekele-வில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்கள் குவித்தது.
அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்கள் குவித்தார். ரிஷாப் பண்ட் 49 (33) ஓட்டங்களும், ஜெய்ஸ்வால் 40 (21) ஓட்டங்களும் விளாசினர். இலங்கை தரப்பில் பத்திரனா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 170 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்வியுற்றது. நிசங்கா 79 (48) ஓட்டங்களும், குசால் மெண்டிஸ் 45 (27) ஓட்டங்களும் விளாசினர்.
அரைசதம் விளாசிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை ஆட்டநாயகன் விருது பெற்ற விராட் கோலியை சாதனையை அவர் முறியடித்தார்.
விராட் கோலி (Virat Kohli) 125 போட்டிகளில் 16 முறை ஆட்டநாயகன் விருது பெற்ற நிலையில், சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) 69 போட்டிகளிலேயே பெற்றுவிட்டார்.
அதிகமுறை டி20 ஆட்டநாயகன் விருதுபெற்ற வீரர்கள்
- சூர்யகுமார் யாதவ் (69 போட்டிகள்) - 16 முறை
- விராட் கோலி (125 போட்டிகள்) - 16 முறை
- சிக்கந்தர் ரஸா (91 போட்டிகள்) - 15 முறை
- முகமது நபி (129 போட்டிகள்) - 14 முறை
- ரோஹித் ஷர்மா (159 போட்டிகள்) - 14 முறை
- விரந்தீப் சிங் (78 போட்டிகள்) - 14 முறை
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |