நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்! மனைவி பிறந்தநாளில் சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக உயர்ந்துள்ள சூர்யகுமார் யாதவ் தனது மனைவியின் பிறந்தநாளுக்கு அழகான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பிறந்தநாள் கொண்டாடிய தேவிஷா
சூர்யகுமார் யாதவுக்கும், தேவிஷா என்ற பெண்ணிற்கும் கடந்த 2016ல் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் தேவிஷா தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதையடுத்து சூர்யகுமார் யாதவ் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டு அழகான பதிவை எழுதியுள்ளார்.
suryakumaryadav instagram
நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்
அதில், என் அழகான மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனது எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பவர், என்னை உந்துதலாகவும், கவனம் செலுத்தவும், அடித்தளமாகவும் வைத்திருப்பவர்.
நீ இல்லாமல் நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு அனுப்பப்பட்ட மிகப்பெரிய ஆசீர்வாதத்தை இங்கே கொண்டாடுகிறேன் என பதிவிட்டுள்ளார்.