ஆம்ஸ்டர்டாமில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவர் இந்த நாட்டவர்... அதிகாரிகள் தகவல்
ஆம்ஸ்டர்டாமில் ஐந்து பேரை கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியைச் சேர்ந்த 30 வயது உக்ரேனிய நாட்டவர் என்பதை உள்ளூர் பொலிசார் வெளிப்படுத்தியுள்ளனர்.
உடனடியாகக் கைது
மத்திய ஆம்ஸ்டர்டாமில் வியாழக்கிழமை மதியம் பரபரப்பான டாம் சதுக்கத்திற்கு அருகில் கத்தியால் தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபர் ஐந்து பேரை காயப்படுத்தியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்திற்குப் பிறகு, அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார், அவரது காலில் காயம் ஏற்பட்டது. அந்த நபர் புதன்கிழமை ஆம்ஸ்டர்டாம் ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக கூறிய பொலிசார்,
வியாழக்கிழமை தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்ட நிலையில், ஏப்ரல் 1ம் திகதி அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார் என்றும், அதன் பின்னர் அவர் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் உடல்நிலை
நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கான நோக்கம் குறித்து சனிக்கிழமை வரையில் பொலிசாரால் உறுதி செய்யப்படவில்லை என்றும், விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கானவர்கள் 26 வயது போலந்து நாட்டவர், 73 வயது பெல்ஜியம் பெண்மணி ஒருவர், ஆம்ஸ்டர்டாமை சேர்ந்த 19 வயது பெண்மணி ஒருவர், 67 மற்றும் 69 வயதுடைய அமெரிக்க நாட்டவர்கள் இருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமைக்குள் அந்த போலந்து நபர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்றும், அதே நேரத்தில் மற்ற பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் மருத்துவமனையில் உள்ளனர் எனவும், ஆனால் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |