வெளிநாட்டில் மாயமான பிரித்தானியச் சிறுமி வழக்கு: சந்தேக நபர் விடுதலை
போர்ச்சுக்கல் நாட்டில் மாயமான பிரித்தானியச் சிறுமி வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் மாயமான பிரித்தானியச் சிறுமி
2007ஆம் ஆண்டு, போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது தங்கள் மகளான மேடி என்னும் மேட்லின் மெக்கேன் என்ற மூன்று வயதுச் சிறுமியை தவறவிட்டார்கள் கேட் மற்றும் கெர்ரி மெக்கேன் என்னும் பிரித்தானியத் தம்பதியர்.
குழந்தையைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் கிறிஸ்டியன் (Christian Brueckner) என்னும் நபர், வேறொரு மோசமான குற்றத்துக்கான ஜேர்மன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஆக, பிரித்தானியா, ஜேர்மனி, போர்ச்சுக்கல் ஆகிய மூன்று நாட்டு பொலிசார் மேட்லினைத் தேடிவந்தார்கள்.
குழந்தை மேட்லின் காணாமல்போய் சுமார் 18 ஆண்டுகள் ஆகியும் அவளுக்கு என்ன ஆயிற்று என்பதும் தெரியவில்லை, ஒருவேளை அவள் சந்தேக நபரான கிறிஸ்டியனால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றால் அவளது உடலும் கிடைக்கவில்லை.
கிறிஸ்டியன் மேட்லின் குறித்து ஏதாவது கூறுவாரா என பொலிசார் காத்திருந்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஜேர்மனியின் Sehnde நகரில் வன்புணர்வுக் குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிறிஸ்டியன் தனது தண்டனைக்காலம் முடிவடைந்ததால் தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
என்றாலும், இன்னமும் மேட்லின் வழக்கில் அவர் சந்தேக நபர்தான். ஆகவே, மூன்று நாட்டு பொலிசாரும் அவரைக் கண்காணித்தவண்ண்மே இருப்பார்கள் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |