பிரித்தானிய கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள்: 150 குடும்பங்கள் வெளியேற்றம்
Suspicious Items Found in Somerset 150 Neighborhood Evacuated: பிரித்தானியாவின் சோமர்செட் பகுதியில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து 150க்கும் மேற்பட்ட வீடுகள் காலி செய்யப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய பொருள் கண்டெடுப்பு
பிரித்தானியாவின் வோர்லே(Worle) பகுதியில் உள்ள குடியிருப்பு முகவரி சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதன்கிழமை பெக்கெட் சாலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை அவான்(Avon) மற்றும் சோமர்செட்(Somerset) காவல்துறையினர் முன்னெடுத்தனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பகுதியை சுற்றியுள்ள 150-க்கும் மேற்பட்ட வீடுகளை சோமர்செட் அதிகாரிகள் காலி செய்துள்ளனர்.

அத்துடன் சம்பவ இடத்தை சுற்றி 100 மீட்டர் தூரத்திற்கு தடை விதிக்கப்பட்ட பகுதியாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்த தடை இரவு முழுவதும் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போலியாக பிரதிநிதித்துவம் செய்த மோசடி குற்றச்சாட்டின் கீழ் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட மக்களுக்கு உதவ வடக்கு சோமர்செட் கவுன்சில் ஏற்பாடுகள் செய்து வருகிறது.
வெளியேற்றப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில் அதனை பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக NHS அமைப்பினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.