ஆட்டமிழக்காமல் 99 ரன் விளாசிய கேப்டன்! ஆனாலும் தோல்வியடைந்த அணி
டி20 பிளாஸ்ட் போட்டியில் சசெக்ஸ் அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சர்ரே அணியை வீழ்த்தியது.
ஹுயூக்ஸ் 65
லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் சசெக்ஸ் (Sussex) மற்றும் சர்ரே (Surrey) அணிகள் மோதின.
முதலில் ஆடிய சசெக்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்கள் குவித்தது. அல்சோப் 35 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் விளாசினார்.
டேனியல் ஹுயூக்ஸ் 43 பந்துகளில் ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் எடுத்தார். மெக்ஆண்ட்ரு 15 பந்துகளில் 29 ஓட்டங்கள் எடுத்தார்.
An excellent diving catch by Jason Roy! ?
— Surrey Cricket (@surreycricket) June 7, 2024
Sharks 137/5 from 14 overs.
WATCH LIVE ➡️ https://t.co/fYQ3aOCT8w
? | #SurreyCricket https://t.co/JNc890fejo pic.twitter.com/gGHktlHOqT
போப் 99
டாம் கர்ரன் 3 விக்கெட்டுகளும், டேனியல் லாரன்ஸ் 2 விக்கெட்டுகளும், ஸ்பென்ஸர் ஜான்சன் மற்றும் ஜோர்டான் கிளார்க் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய சர்ரே அணியில் தொடக்க வீரர்கள் லாரி எவன்ஸ் (12), டேனியல் லாரன்ஸ் (6) சொதப்பினர். அடுத்து வந்த ஜேசன் ராய் 22 பந்துகளில் 26 ஓட்டங்களும், ஜேமி ஸ்மித் 8 பந்துகளில் 18 ஓட்டங்களும் விளாசினர்.
அதன் பின்னர் வந்த வீரர்கள் சொதப்பிய நிலையில், அணித்தலைவர் ஓலி போப் (Ollie Pope) தனியாளாய் போராடினார். எனினும், சர்ரே அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.
Ollie Pope whacks two 6⃣'s in a row! ?
— Surrey Cricket (@surreycricket) June 7, 2024
? | #SurreyCricket
ஓலி போப் ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் 99 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகள் அடங்கும். சசெக்ஸ் அணியின் தரப்பில் நாதன் மெக்ஆண்ட்ரு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |