பிரித்தானிய கடற்கரையில் நிகழ்ந்த சோகம்: மருத்துவமனையில் 6 வயது சிறுமி உயிரிழப்பு
சசெக்ஸ் கடற்கரையில் நடந்த துயர சம்பவத்தில் 6 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சசெக்ஸ் கடற்கரையில் நடந்த சோகம்
Sussex coast tragedy 6 years old girl died: சசெக்ஸ் கடற்கரைக்கு சுற்றுலா சென்ற குடும்பத்தை உலுக்கிய சோக சம்பவத்தில் ஏற்கனவே பெற்றொரும், மூத்த மகளும் உயிரிழந்த நிலையில் தற்போது 6 வயது சிறுமி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
மேற்கு லண்டனில் இருந்து ஷோர்ஹாம் கடற்கரைக்கு வந்த குடும்பத்தினர் பிற்பகலில் 2 மணியளவில் கடலில் நீந்துவதற்காக இறங்கியுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விபத்தில் குடும்பத்தினர் கடலில் சிக்கிக் கொண்டதை அடுத்து ஹோர்ஹாம் கோட்டைப் பகுதிக்கு அவசர கால மீட்புப் படையினர் அழைக்கப்பட்டனர்.

பெற்றோர்களான 55 வயது ஹசன் எல் கவாஸ் மற்றும் 37 வயது ஜெய்னா அலைன் மற்றும் இவர்களின் மூத்த மகளான 14 வயது அக்கா சாரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 6 வயதான சஜா எல்-கவாஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் வெள்ளிக்கிழமை 6 வயதான சஜா எல்-கவாஸ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |