இந்தியாவில் Suzuki e-Access எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி தொடக்கம்
சுஸூகியின் முதல் மின்சார ஸ்கூட்டர் "e-Access" இந்தியாவில் உற்பத்தியை தொடங்கியது.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-ல் முதலில் அறிமுகமான Suzuki e-Access மின்சார ஸ்கூட்டர், தற்போது இந்தியாவின் குருக்ராம் ஆலையில் உற்பத்தி செய்யப்படத் தொடங்கியுள்ளது.
பிரபல Access 125 மொடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட e-Access, லேட்டஸ்ட் வடிவமைப்புடன் வருகிறது.
இதில் செவ்வக வடிவ LED ஹெட்லைட், vertical LED DRL மற்றும் ஸ்மார்ட்போனுடன் இணைக்கக்கூடிய 4.2 அங்குல digital instrument console உள்ளது.
இந்த மின்சார ஸ்கூட்டரில் 3.07 kWh லிதியம் அயன் பாஸ்பேட் (LFP) பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே முறை சார்ஜில் 95 கிமீ வரை தூரம் பயணிக்க முடியும். போர்டபிள் சார்ஜர் மூலம் 6 மணி 20 நிமிடங்களில் மற்றும் DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 2 மணி 12 நிமிடங்களில் முழு சார்ஜ் செய்யலாம்.
4.1 kW மின்மோட்டாரை கொண்ட இது, பராமரிப்பு தேவையில்லாத பெல்ட் டிரைவ் அமைப்புடன் வருகிறது. அதிகபட்ச வேகம் மணிக்கு 71 கிமீ செல்வதற்குத் திறன் உள்ளது.
மேலும், regenerative braking, a combined brake system, keyless system, 17 litres of underseat storage, USB port மற்றும் நான்கு ரைடிங் மோட்கள் (Eco, Ride mode A, Ride mode B, Reverse) ஆகியவை இதில் உள்ளன.
சுஸூகியின் இந்த புதிய முயற்சி, இந்திய மின்சார வாகனத் துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடக்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Suzuki e-Access Tamil, Electric scooter India 2025, Suzuki EV scooter launch, Bharat Mobility Expo, e-Access battery range, Suzuki electric vehicle news