புதிய 1.5 லிட்டர் டர்போ என்ஜின் திட்டத்தை உறுதிப்படுத்திய Suzuki
Suzuki Motor Corporation நிறுவனம் தனது எதிர்கால உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப திட்டங்களை வெளியிட்டுள்ளது.
2025 செப்டம்பர் 9-ஆம் திகதி நடைபெற்ற Technology Strategy Briefing நிகழ்வில், புதிய 1.5 லிட்டர் டர்போ சார்ஜ் என்ஜின் உருவாக்கம் உறுதிப்படுத்தப்பட்டது.
இது அடுத்த தலைமுறை Internal Combustion Engine (ICE) திட்டத்தின் முக்கிய அங்கமாகும்.
தற்போதைய திட்டத்தில், 2025-ல் 1.5 லிட்டர் வரை உள்ள bioethanol-ஐ ஏற்கும் என்ஜின்கள் அறிமுகமாகவுள்ளன.
இவை 85 சதவீத ethanol கலவையைச் செயல்படுத்தக்கூடிய flex fuel vehicles (FFVs) ஆக இந்தியாவில் அறிமுகமாகும்.
2030-க்குள் Direct-injection turbo என்ஜின்கள் வணிகரீதியாக பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
நிறுவனம் Dedicated Hybrid Engines உருவாக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இவை Super Ene-Charge (SEC) 48V ஹைபிரிட் அமைப்புடன் இணைக்கப்படும். இந்த அமைப்பு feasibility சோதனைகளை முடித்து, அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு சென்றுள்ளது.
Series Hybrid (SHEV) மற்றும் Plug-in Hybrid (PHEV) மொடல்களும் 2030-க்குள் பாரிய வாகன வகைகளாக வரவிருக்கின்றன.
இதனிடையே, மின்சார வாகன வளர்ச்சியின் பகுதியாக, e-Vitara மற்றும் e-Address மோதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2035-க்குள் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை e-Axle மற்றும் பேட்டரி அமைப்புகள் அறிமுகமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Suzuki 1.5L turbo engine roadmap, Suzuki ICE strategy 2025, Suzuki hybrid engine development, Suzuki flex-fuel vehicles India, Suzuki ethanol engine launch, Suzuki Super Ene-Charge hybrid, Suzuki e-Vitara electric SUV, Suzuki 2030 engine technology