மைக்கை வைத்து நடிகர் எஸ்.வி.சேகர் ஏற்படுத்தும் குழப்பம்.., சீமானை ஆதரிக்கிறாரா? இல்லையா?
மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் பதிவிடும் கருத்துக்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
மைக் சின்னம்
கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்தார்.
ஆனால், கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. பின்னர், நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.
இதனைத்தொடர்ந்து, மைக் சின்னத்திற்கு பதிலாக படகு அல்லது பாய்மர படகு சின்னத்தை ஒதுக்கி தரும்படி நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம் ஏற்கனவே ஒதுக்கியுள்ள 'மைக்' சின்னத்தை உறுதி செய்தது.
எஸ்.வி.சேகரின் ட்வீட்
இந்நிலையில், பாஜகவை விமர்சிக்கும் நடிகர் எஸ்.வி.சேகர் மைக் சின்னத்துடன் இருக்கும்படியான புகைப்படத்தை நேற்று ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். இதனால், நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது.
முதன் முதலில் 1969ல் சென்னை விவித பாரதியில் வந்த முதல் விளம்பரம் இந்த SHURE mikeல் தான் ரெகார்ட் செய்தேன். ரஜினி குரலை முதன் முதலில் அபூர்வ ராகங்களுக்காக இந்த மைக்கில்தான் பதிவு செய்து ஒலிபரப்பினேன். நான் 1974 ல் நடித்த முதல் மேடை கண்ணாமூச்சிநாடத்திலும் இதே ஷுயூர் மைக்தான்.👍 https://t.co/QHsiKKLzK5
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) March 29, 2024
இந்நிலையில், இன்று தனது பதிவில், "முதன் முதலில் 1969ல் சென்னை விவித பாரதியில் வந்த முதல் விளம்பரம் இந்த SHURE mikeல் தான் ரெகார்ட் செய்தேன். ரஜினி குரலை முதன் முதலில் அபூர்வ ராகங்களுக்காக இந்த மைக்கில்தான் பதிவு செய்து ஒலிபரப்பினேன்.
நான் 1974 ல் நடித்த முதல் மேடை கண்ணாமூச்சிநாடத்திலும் இதே ஷுயூர் மைக்தான்" என்று கூறியுள்ளார்.
இதனால், மக்களவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கிறாரா? இல்லையா? என்கிற கேள்விக்கு பதில் சொல்லாமல் எஸ்.வி.சேகர் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |