ரூ.921 கோடிக்கு சொத்து.. தாயாரின் புடவை ரூ.2 கோடி.., யார் இந்த சுயேட்சை வேட்பாளர்?
மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ.921 கோடி சொத்து காட்டிய சுயேட்சை ஒருவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
யார் அவர்?
திருப்பரங்குன்றம் தோப்பூரைச் சேர்ந்த கன.வேழவேந்தன் (50). இவர், மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாளில், கடைசி நபருக்கு முந்தைய நபராக மனு தாக்கல் செய்ய வந்தார்.
அப்போது, மனுதாக்கல் முடிய வேண்டிய கடைசி நேரத்தில் அவருக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது. இவரும் கடைசி ஆளாக மனுதாக்கல் செய்துவிட்டு கிளம்பினார்.
மனு தள்ளுபடி
இதனைத்தொடர்ந்து, மனு பரிசீலனையின் போது வேழவேந்தனின் மனு முழுமையாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அவர் தனது மனுவில், தனக்கு ரூ.921 கோடி சொத்து இருப்பதாகவும், தாயாரின் புடவை ரூ.2 கோடி எனவும் தெரிவித்துள்ளார்.
வழக்குகள், வாகனங்கள், கடன்கள், நிதிநிறுவன முதலீடு என 90 சதவீத கேள்விகளுக்கு இல்லை என்ற பதிலே தெரிவித்திருந்தார்.
இதைப்பற்றி அவரிடம் கேட்டபோது, "நான் திருச்சி மாவட்டம் மாம்பட்டி ஜமீன் வாரிசு. எங்களது ஆளுகையானது துங்கபத்ரா முதல் கன்னியாகுமரி வரை இருந்தது. 2011 -ம் ஆண்டு போட்டியிட்டு 300 வாக்குகள் வாங்கியிருந்தேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |