விமானத்தை நிறுத்திய கொசுக்கள்.! புகைமூட்டமான கேபின்., மூச்சுத்திணறிய பயணிகள்
கொசுக்கள் எப்படி விமானத்தை நிறுத்தமுடியும்? என்று ஆச்சரியப்படுகிறீர்களா? நீங்கள் கேட்டது உண்மைதான். கொசுக்கள் தாக்கியதால் விமானம் சரியான நேரத்தில் புறப்பட முடியாமல் போன இந்த விசித்திரமான சம்பவத்தைப் படியுங்கள்.
மெக்சிகோவில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. மெக்சிகோவின் குவாடலஜாராவில் இருந்து வோலாரிஸ் என்ற பயணிகள் விமானம் புறப்பட தயாராக உள்ளது. எங்கிருந்தோ கொசுக் கூட்டம் விமானத்துக்குள் புகுந்தது. பயணிகள் அனைவரும் மூச்சு திணறினர். மேலும் விமான ஊழியர்கள் கொசுக்களை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
விமானக் குழுவினர் கொசுக்களுக்கு மருந்து தெளித்து போராடத் தொடங்கினர். ஸ்பிரே காரணமாக விமானம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
இந்த காட்சியை சில பயணிகள் வீடியோ எடுத்து வைரலாக பரவியது. கொசுக்களை விரட்ட கடுமையாக உழைத்த ஊழியர்களுக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.
A Volaris flight traveling within Mexico from Guadalajara to Mexico City on Friday, October 6, was delayed by more than two hours due to a mosquito infestation, local media reported. pic.twitter.com/wA4oyXZJTK
— Storyful (@Storyful) October 11, 2023
கொசுக் கூட்டங்கள் மெக்சிகோ விமானத்தைத் தாக்குவது இது முதல் முறையல்ல. 2019-ஆம் ஆண்டிலும் இதே போன்ற சம்பவம் நடந்தது. விமான நிலையம் அருகே அடிக்கடி வெள்ளப்பெருக்கு மற்றும் பெரிய மரங்கள் இருப்பதால் கொசுக்களின் அபாயம் அதிகமாக உள்ளதாக தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |