இனி எதிரி நாட்டின் ரேடாரில் சிக்காது இந்திய தேஜாஸ் போர் விமானம் - DRDO செய்த மாற்றம்
எதிரி நாட்டின் ரேடாரில் தேஜாஸ் போர் விமானம் சிக்காத வகையில் புதிய மாற்றம் ஒன்றை DRDO செய்துள்ளது.
தேஜாஸ் விமானம்
உலகளவில், அமெரிக்காவின் F-35 மற்றும் ரஷ்ய Su-57 போன்ற ஸ்டெல்த் போர் விமானங்கள் வான்வழிப் போரில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

அதே போல், இந்தியாவின் தேஜஸ் விமானத்தையும் எதிரிகளின் ரேடாரில் சிக்காத வகையில், நவீன போர் விமானமாக மாற்றும் முயற்சியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இறங்கியுள்ளது.
இந்தியாவின் பொதுத்துறை விண்வெளி நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) தேஜாஸ் விமானங்களை தயாரித்து வருகிறது.

தேஜாஸ் Mk1A(Tejas Mk1A) இந்தியாவின் மிகவும் மேம்பட்ட உள்நாட்டு போர் விமானமாகும்.
ஸ்வயம் ரக்ஷா கவாச்
தற்போது இதில் ஸ்வயம் ரக்ஷா கவாச்(Swayam Raksha Kavach) எனப்படும் சுய பாதுகாப்பு கவசத்தை DRDO பொருத்தியுள்ளது. இதன் மூலம் எதிரியின் ரேடாரில் விமானம் சிக்குவது கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்றாக மாறியுள்ளது.

இந்த அமைப்பில் பரந்த ஸ்பெக்ட்ரம் ரேடார் எச்சரிக்கை பெறுநர் (RWR) உள்ளது. இது எதிரி ரேடாரால் விமானம் கண்டறியப்படும் போதெல்லாம் விமானிகளை எச்சரிக்கை செய்யும்.
ஸ்வயம் ரக்ஷா கவாச்சில் டிஜிட்டல் ரேடியோ அதிர்வெண் நினைவக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேம்பட்ட சுய-பாதுகாப்பு ஜாமர் (ASPJ) உள்ளது.
இது எதிரி ரேடாருக்கு தவறான சமிக்ஞைகளை அனுப்பு, எதிரிகளை குழப்பி, போர் விமானத்தின் இருப்பிடத்தைக் கண்டறிவதைத் தடுக்கிறது.
ரேடார் மற்றும் ஏவுகணை தாக்குதலில்லிருந்து போர் விமானத்தைப் பாதுகாக்கும் நோக்கில், 2021 ஆம் ஆண்டில் இதன் உற்பத்தி தொடங்கியது.

டிஆர்டிஓவின் ஏர்போர்ன் சிஸ்டம்ஸ் மையத்தால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு 2026 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த செப்டம்பரில், 68 ஒற்றை இருக்கை விமானங்கள் மற்றும் 29 இரட்டை இருக்கை விமானங்கள் உட்பட 97 தேஜாஸ் Mk1A ஜெட் விமானங்களுக்கான ஒப்பந்தத்தை இந்திய அரசிடமிருந்து HAL பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |