பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட 38,000 பெண்கள்! பிரபல ஐரோப்பிய நாட்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்
ஸ்வீடனில் 38,000 சிறுமிகளை மற்றும் பெண்களின் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டிருப்பதாக கணக்கெடுப்பின் மூலம் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்வீடனின் தேசிய சுகாதாரம் மற்றும் நல வாரியத்தால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, குறைந்தது 38,000 பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் அந்நாட்டில் வாழ்கின்றனர்.
தேசிய சுகாதாரம் மற்றும் நல வாரியம் ஸ்வீடனில் உள்ள சுகாதார மையங்கள், இளைஞர் மருத்துவமனைகள், மகளிர் மருத்துவமனைகள், தாய்வழி சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பள்ளி செவிலியர்கள் மத்தியில் கணக்கெடுப்பை நடத்தியது. அதன்படி, ஸ்வீடனில் சிறுமிகள் மற்றும் பெண்கள் பிறப்புறுப்பு சிதைவுக்கு ஆளாகிறார்கள் என்று தேசிய சுகாதார மற்றும் நல வாரியம் கவலை தெரிவித்தது.
அந்த செய்திக்குறிப்பில், பிறப்புறுப்பு சிதைவுக்கு ஆளான சில சிறுமிகள் மற்றும் பெண்கள் கவனிப்பை நாடவில்லை என்று தேசிய சுகாதார மற்றும் நல வாரியம் தெரிவித்துள்ளது. 5,000 பேர் மட்டுமே கவனிப்பை நாடியுள்ளனர். அதிலும் பெரும்பாலானோர் கர்ப்பமடைந்ததன் காரணமாகவே மருத்துவமனையை நாடியுள்ளனர்.
மேலும், இந்த ஆய்வில் சுகாதாரம் மற்றும் மாணவர்களின் ஆரோக்கியத்தில் அதிக அறிவு தேவை என்று தெரியவந்துள்ளது.
பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள்:
4 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளே பெரும்பாலும் பிறப்புறுப்பு சிதைவுக்கு ஆளாகிறார்கள் என்று தேசிய சுகாதாரம் மற்றும் நல வாரியம் எடுத்துக்காட்டுகிறது.
பள்ளிகளில் இது குறித்து மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதன் முக்கியத்துவத்தை வாரியம் வலியுறுத்தியது.
மேலும், பள்ளி செவிலியர்களில் 28% மற்றும் இளைஞர் கிளினிக்குகளில் 45% மட்டுமே பெண் பிறப்புறுப்பு சிதைவைத் தடுக்கும் வகையில் செயல்படுகிறார்கள் என்று அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர். மேலும், சுகாதார மையங்களின் செயல்பாட்டுத் தலைவர்களில் 49% பேர், தங்கள் வரவேற்பறையில் உள்ள ஊழியர்களுக்கு பிறப்புறுப்பைச் சிதைப்பது குறித்து எந்தப் பயிற்சியும் இல்லை என்று தெரிவித்தனர்.
தேசிய சுகாதாரம் மற்றும் நல வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "பெண் பிறப்புறுப்பு சிதைவு" குறித்த ஆன்லைன் பயிற்சியில் ஊழியர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று கிட்டத்தட்ட 55% பேர் கூறியுள்ளனர்.
பிறப்புறுப்பு சிதைவுக்கு ஆளான சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்படும் பராமரிப்பு குறித்து விசாரணை நடத்த தேசிய சுகாதாரம் மற்றும் நல வாரியத்திடம் ஸ்வீடனின் அரசு கோரியுள்ளது. தங்களுக்கு வழங்கப்படும் பராமரிப்பு, பிராந்தியங்கள் முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதை ஆய்வு செய்து மதிப்பிடுமாறு அரசு கேட்டுள்ளது.
ஆய்வாளரான ஷராரே அகவன் (Sharareh Akhavan) ஒரு செய்திக்குறிப்பில், கணக்கெடுப்புக்காக, அவர்கள் நேர்காணல்களை நடத்தி, அது சிதைக்கப்படுவது ஒரு அதிர்ச்சி என்பதைக் கண்டறிந்ததாகத் தெரிவித்தார். பிறப்புறுப்பு சிதைவு பெண்கள் மற்றும் சிறுமிகளிடையே தூங்குவதில் சிரமம், பதட்டம் மற்றும் சுயமரியாதை குறைபாட்டை ஏற்படுத்துகிறது என கூறப்படுகிறது