WC 2023: அவுஸ்திரேலியாவை வீழ்த்திய ஸ்வீடன்! வெண்கலப்பதக்கத்துடன் துள்ளித் குதித்த வீராங்கனைகள்
மகளிர் உலகக்கோப்பையில் 3வது இடத்திற்கான போட்டியில் அவுஸ்திரேலியாவை 0-2 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் வீழ்த்தியது.
மூன்றாவது இடத்திற்கான போட்டி
2023ஆம் ஆண்டு மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
நாளையை தினம் இறுதிப்போட்டி (ஸ்பெயின்-இங்கிலாந்து) நடைபெற உள்ள நிலையில், 3வது இடத்திற்கான போட்டி இன்று நடந்தது.
?? @SvenskFotboll round off their #FIFAWWC 2023 campaign with a win. ?
— FIFA Women's World Cup (@FIFAWWC) August 19, 2023
Suncorp மைதானத்தில் நடந்த போட்டியில் ஸ்வீடன் அணி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், ஸ்வீடனின் பிரிடோலினா ரோல்போ கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து 62வது நிமிடத்தில் கொசோவாரே அஸ்லணி அபாரமாக கோல் அடிக்க, அதுவே ஸ்வீடனின் வெற்றி கோலாகவும் மாறியது.
Twitter (@FIFAWWC)
வெண்கலம் வென்ற ஸ்வீடன்
அவுஸ்திரேலிய அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாததால், ஸ்வீடன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலத்தை வென்றது.
Twitter (@FIFAWWC)
வெண்கலப்பதக்கத்தை வென்ற ஸ்வீடன் வீராங்கனைகள் உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மகளிர் உலகக்கோப்பையில் ஸ்வீடன் அணி 4வது முறையாக வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Twitter (@FIFAWWC)? @SvenskFotboll ?#BeyondGreatness | #FIFAWWC pic.twitter.com/MbxWKYybFn
— FIFA Women's World Cup (@FIFAWWC) August 19, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |