உலகக்கோப்பையில் முன்னாள் சாம்பியன் ஜப்பானை வெளியேற்றிய சுவீடன்! கதறி அழுத வீராங்கனைகள்
மகளிர் உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில் சுவீடன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.
சுவீடன் மிரட்டல்
ஈடன் பார்க் மைதானத்தில் முன்னாள் சாம்பியனான ஜப்பான் மற்றும் சுவீடன் அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டி நடந்தது.
பரபரப்பான இந்தப் போட்டியின் 32வது நிமிடத்தில் சுவீடன் அணியின் அமண்டா அபாரமாக கோல் அடித்தார்.
Carmen Mandato/Getty Images
அதன் பின்னர் 51வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் சுவீடனின் ஃப்லிப்ப ஏஞ்சல்டல் கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து ஜப்பான் அணிக்கு ஒருவழியாக 87வது நிமிடத்தில் கோல் கிடைத்தது.
முன்னாள் சாம்பியன் வெளியேற்றம்
அந்த அணியின் ஹொனாக ஹயாஷி மிரட்டலாக கோல் அடித்தார். ஆனால் அதன் பின்னரான சுவீடனின் தடுப்பாட்டத்தினால் ஜப்பானால் கோல் அடிக்க முடியவில்லை.
REUTERS
இதனால் முன்னாள் சாம்பியனான ஜப்பான் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்று வெளியேறியது. தோல்விக்கு பின் ஜப்பான் வீராங்கனைகள் கதறி அழுதனர்.
இந்த உலகக்கோப்பையில் முன்னாள் சாம்பியன்களான அமெரிக்கா, ஜேர்மனி, நார்வே ஆகிய அணிகள் வெளியேறிய நிலையில் தற்போது ஜப்பானும் வெளியேறியதால், முதல் முறையாக ஒரு அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
Michael Bradley / AFP
Michael Bradley / AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |