ஸ்வீடனில் குர்ஆன் தீ வைத்து எரிப்பு! ஏன் இன்னும் அமைதி? கொலை மிரட்டல் விடுத்த துருக்கி எழுத்தாளர்
ஸ்வீடனில் இஸ்லாமிய புனித நூலான குர்ஆனை தீ வைத்து எரித்த அரசியல்வாதிக்கு துருக்கி எழுத்தாளர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வீடனில் வெடித்த போராட்டம்
மேற்கத்திய பாதுகாப்பு கூட்டணியான நோட்டோவில் ஸ்வீடன் இணைவதற்கு துருக்கி முட்டுகட்டையாக இருந்து வரும் நிலையில், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்லாமில் உள்ள துருக்கி தூதரகம் முன்பு ஸ்வீடனின் ஸ்டேம் குர்ஸ் கட்சி தலைவர் ரஸ்முஸ் பலுடன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் ஸ்வீடனின் கருத்து சுகந்திரத்தை ஒடுக்க துருக்கி ஜனாதிபதி எர்டோகன் முயற்சிப்பதாக ரஸ்முஸ் பலுடன் குற்றம்சாட்டினார்.
அத்துடன் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய வந்த ரஸ்முஸ் பலுடன், ஒருகட்டத்தில் இஸ்லாமிய மதத்தினரின் புனித நூலான குர் ஆனை தீ வைத்து எரித்தார்.
EPA-EFE/REX/SHUTTERSTOCK
இது உலகின் பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இத்தகைய போராட்டங்களை அனுமதிக்கும் ஸ்வீடன் அரசின் முடிவு “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று துருக்கியும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
அத்துடன் போராட்டத்தை விரைவாக முடிவுக்கு கொண்டு வருமாறும், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது.
கொலை மிரட்டல்
இந்நிலையில் ஸ்வீடனில் இஸ்லாமிய புனித நூலான குர்ஆனை தீ வைத்து எரித்த அரசியல்வாதி ரஸ்முஸ் பலுடனுக்கு துருக்கி எழுத்தாளர் ரம்ஜான் இசொல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
A bastard burned the Quran today in Sweden, why are you silent as Muslims? If I catch this rascal who burned the Quran, I will burn him alive. pic.twitter.com/CRkpeHTjQa
— Ramazan İzol (@ramazanizoltr) January 21, 2023
துருக்கிய எழுத்தாளர் ரம்ஜான் இசொல் இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்வீடனில் முறை தவறி பிறந்தவர் குர் ஆனை இன்று தீ வைத்து எரித்துள்ளார்.
இஸ்லாமியர்களாக நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? குர் ஆனை எரித்த அந்த போக்கிரியை நான் பிடித்தேன் என்றால் நான் அவரை உயிருடன் தீ வைத்து எரித்துவிடுவேன்' என பதிவிட்டுள்ளார்.
ஸ்வீடன், துருக்கி இடையே ஏற்கனவே ஆயுதமேந்திய குர்திஷ் குழுக்கள் தொடர்பான சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில், தற்போது வெடித்துள்ள இந்த சர்ச்சை இருநாடுகளுக்கு இடையே உள்ள உறவில் மீண்டும் பிரச்சனையை வலுப்படுத்தியுள்ளது.