ஸ்வீடன் பள்ளியில் வாள்வெட்டுத் தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு
ஸ்வீடன் பள்ளியில் நடந்த வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஸ்வீடன் பள்ளியில் வாள்வெட்டுத் தாக்குதல்
வெள்ளிக்கிழமை மத்திய ஸ்வீடனின் பாகர்ஸ்டா(Fagersta) பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் கொடூரமான வாள்வெட்டுத் தாக்குதல் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு இருப்பதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கிட்டத்தட்ட 450 மாணவர்கள் வரை பயிலும் Brinellskola உயர்நிலைப் பள்ளியில் தாக்குதல் தொடர்பாக பிற்பகல் 2.00 மணியளவில் அவசர அழைப்புகள் காவல்துறையினருக்கு சென்றுள்ளது.

இதையடுத்து விரைந்து செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள், 18 வயது இளைஞர் ஒருவர் வாளுடன் தாக்குதல் நடத்தியதை கண்டுபிடித்தனர்.
மேலும் மிகவும் அச்சுறுத்தலாக கருதப்பட்ட அந்த நபர் காவல்துறை அதிகாரிகளால் சுடப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்.
இதன் மூலம் பொதுமக்களுக்கு இருந்த நேரடி அச்சுறுத்தல் முழுமையாக நீங்கியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த வன்முறை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ்கள், காவல்துறை வாகனங்கள் மற்றும் ரோந்து ஹெலிகாப்டர்கள் ஆகியவை குவிக்கப்பட்டதாக SVT செய்தி வெளியிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |