ஐரோப்பிய நாடொன்றில் அதிர்ச்சி சம்பவம்... ஸ்கூட்டரில் தப்பிச் சென்ற நபருக்கு வலைவீச்சு
ஸ்வீடனில் ஒரு சிகையலங்கார நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கறுப்பு நிற உடையில்
மத்திய உப்சாலாவில் உள்ள வக்சாலா சதுக்கத்தில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, ஒரு பெரிய பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நகர மையத்தில் துப்பாக்கிச் சூடு போன்ற சத்தம் கேட்டதாக பொதுமக்களிடமிருந்து தங்களுக்கு தகவல் வந்ததாக காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூட்டைக் குறிக்கும் காயங்களுடன் பலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கறுப்பு நிற உடையில் ஸ்கூட்டரில் தப்பிச் சென்றதாக கூறப்படும் ஒரு சந்தேக நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஸ்வீடன் குழுக்களுக்கு இடையேயான வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில், ஓரேப்ரோவில் நடந்த நாட்டின் மிகக் கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
காவல்துறைக்கு அதிக அதிகாரம்
ஒரு கல்வி மையத்தில் 35 வயது வேலையில்லாத நபர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
குழுக்கள் தொடர்பான வன்முறையைச் சமாளிப்பதற்கான வாக்குறுதியின் பேரில் வலதுசாரி சிறுபான்மை அரசாங்கம் 2022 இல் ஆட்சிக்கு வந்தது.
சட்டங்களை கடுமையாக்கியதுடன் காவல்துறைக்கு அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளது, மேலும் ஓரேப்ரோ துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க முயற்சிப்பதாகக் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |