இளையோர்களுக்கு மாடர்னா தடுப்பூசியை தடை செய்த ஐரோப்பிய நாடு
ஸ்வீடனில் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மாடர்னா தடுப்பூசி அளிப்பதை சுகாதாரத்துறை தடை செய்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவே குறித்த முடிவுக்கு வந்துள்ளதாக ஸ்வீடன் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
மாடர்னா தடுப்பூசியால் இளையோர்களுக்கு இருதய பாதிப்பு ஏற்படுவதாக வெளியான தகவல்களை அடுத்தே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
உலக நாடுகளில் மாடர்னா பக்கவிளைவுகள் குறித்து வெளியாகும் தகவல்களை தொடர்ந்து கண்காணித்து வந்ததன் முடிவாகவே தற்போது 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மாடர்னா தடுப்பூசி அளிப்பதை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜூலை மாதம் ஐரோப்பிய மருத்துவ முகமை 12 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மாடர்னா தடுப்பூசி அளிக்கலாம் என அனுமதி அளித்திருந்தது.
இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஜனவரி முதல் மாடர்னா தடுப்பூசி அளிக்க உள்ளது.
ஆனால் ஸ்வீடனில் மாடர்னா தடுப்பூசிக்கு பதிலாக இளையோர்களுக்கு பைசர் தடுப்பூசி அளிக்க உள்ளனர்.