அமெரிக்க இராணுவ முகாம்கள், பிரான்ஸை அடுத்து... ஸ்வீடன் மளிகைக் கடைகளில்
Temperature soars at Swedish grocery store freezers: ஸ்வீடன் மளிகைக் கடைகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் வெப்பநிலை திடீர் உயர்வு.
ஸ்வீடனில் உள்ள பல மளிகைக் கடைகளில், ஒரே இரவில் குளிர்சாதனப் பெட்டிகளின் வெப்பநிலை கடுமையாக உயர்ந்ததாக, அவற்றை நிர்வகிக்கும் ICA மற்றும் Coop ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பிரான்சில் நடந்தது போலவே
இதில் ஒரு கடை, இந்தச் சம்பவத்திற்குக் சைபர் தாக்குதலே காரணமாக இருக்கலாம் என்று குற்றம் சாட்டியுள்ளது. பிரெஞ்சு காவல்துறை கடந்த மாதம் தெரிவித்த தகவலின்படி, ஹேக்கர்கள் நூற்றுக்கணக்கான சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்த குளிரூட்டும் அமைப்புகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பெரிய அளவிலான தாக்குதலை நடத்தினர்.

இதனால் உணவுப் பொருட்கள் வீணானதுடன், தீ விபத்துகளும் ஏற்பட்டன; இது, இணையத்துடன் இணைக்கப்பட்ட அமைப்புகளில் உள்ள பலவீனங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
திங்களன்று ஸ்வீடனில் உள்ள ஒரு மளிகைக் கடை, தங்களின் சமூக ஊடகங்களில் அதன் குளிர்சாதன பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களின் வெப்பநிலை பிரான்சில் நடந்த தாக்குதலைப் போலவே 50 டிகிரி செல்சியஸாக (122 F) அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியது.
இந்த நிலையில், இரவு நேரத்தில் நடந்த ஒரு சம்பவத்தால், சில கடைகளில் குளிரூட்டும் மற்றும் உறைவிப்பான் அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது எங்களுக்குத் தெரிய வந்துள்ளது என்று, தனியார் நிறுவனமான ICA-வின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவித்தார்.
தனியார் மளிகை சில்லறை விற்பனைக் குழுமமான Coop, தங்களின் ஆறு கடைகளில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக Aftonbladet நாளிதழிடம் தெரிவித்துள்ளது.
சுமார் 20 நாட்களுக்கு முன்பு, ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு துவங்கி, பிரான்சிலுள்ள பல்வேறு பல்பொருள் அங்காடிகளிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகள் சைபர் தாக்குதலுக்குள்ளானது.
50 டிகிரி செல்ஷியஸ்
ஹேக்கர்கள் குளிர்சாதனப்பெட்டிகள், உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட அறைகளின் வெப்பநிலையை 50 டிகிரி செல்ஷியஸ் வரை உயர்த்தியதால், அதில் வைக்கப்பட்டிருந்த காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வீணாகியுள்ளன.

அத்துடன், வெப்பநிலை அதிகமானதால் சில இடங்களில் தீவிபத்துகளும் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா முழுவதும் அமைந்துள்ள இராணுவ முகாம்களில், இதுபோன்ற சைபர் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. முகாம்களில் செயல்பாட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டிகள் தாக்குதலுக்கு இலக்கானதுடன், உணவுகளும் வீணானது.