தித்திக்கும் சுவையில் இனிப்பு பணியாரம்.., இலகுவாக செய்வது எப்படி?
இந்த சுவையான பஞ்சி போன்ற பணியாரம் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்பார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் இனிப்பு பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி- 1 கப்
- வெல்லம்- ¾ கப்
- ஏலக்காய்- 4
- உப்பு- சிறிதளவு
- வாழைப்பழம்- 1
- தேங்காய்- ½
- நெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை 2-3 முறை நன்கு கழுவி ஒரு துணியில் போட்டு உலர்த்த வேண்டும்.
பின் ஒரு பத்திரத்தில் வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் பச்சரிசி சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் அதனுடன் ஏலக்காய், உப்பு, வாழைப்பழம் சேர்த்து அரைத்து அதனுடன் கரைத்து வைத்த வெல்லம் சேர்த்து அரைத்து கலந்துகொள்ளவும்.
இதற்கடுத்து அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் நெய்யில் வறுத்த தேங்காய் துண்டுகளை சேர்த்து கலந்துகொள்ளவும்.
இறுதியாக பணியார சட்டியில் நெய் சேர்த்து உருகியதும் அதில் மாவை ஊற்றி பணியாரம் போல் சுட்டு எடுத்தால் சுவையான பணியாரம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |