குழந்தைகளுக்கு பிடித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு சப்பாத்தி: எப்படி செய்வது?
குழந்தைகளுக்கு இந்த ஆரோக்கியம் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு சப்பாத்தி செய்து கொடுங்கள் விரும்பி உண்பார்கள்.
குழந்தைகள் விருப்பி உண்ணும் சத்தான சர்க்கரை வள்ளிக்கிழங்கு சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சர்க்கரை வள்ளிக்கிழங்கு- 2
- கோதுமை மாவு- 2 கப்
- உப்பு- சிறிதளவு
- மஞ்சள் தூள்- சிறிதளவு
- மிளகாய் தூள்- சிறிதளவு
- கரம் மசாலா- சிறிதளவு
- இஞ்சி பூண்டு விழுது- சிறிதளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில், சர்க்கரை வள்ளிக்கிழங்கை குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.
பின்னர் கிழங்கை தோல் நீக்கி நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து மசித்து எடுத்து வைத்துள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்குடன் கோதுமை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றம் உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
பின்னர் இதனுடன் சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் பிசைந்துக்கொள்ளவும்.
அடுத்து இதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு கிளறிக் கொள்ளவும்.
பின் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிசைந்து விட்டு அரை மணி நேரம் அப்படியே வைத்து விடவும்.
இதனைத்தொடர்ந்து, சப்பாத்தி போல் தேய்த்துக் கொண்டு, தவாவில் சுட்டு எடுத்தால் சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு சப்பாத்தி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |