Sweet Potato Halwa Recipe: சர்க்கரைவள்ளிக்கிழங்கு வைத்து அல்வா செய்வது எப்படி?
Healthy Food Recipes
By Kirthiga
துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு என அறுசுவை இருந்தாலும் பலருக்கும் பிடித்தது இந்த இனிப்பு சுவை தான்.
இதை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இனிப்பு என்று வந்தால் அது அல்வா தான். அல்வா என்றாலே நாவில் எச்சில் ஊறும். ஒவ்வொருவரும் வித்தியாசமான சுவையில் செய்து சாப்பிடுவார்கள்.
அந்தவகையில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு வைத்து எப்படி சுவையான மற்றும் ஆரோக்கியமான அல்வா எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
அரை கிலோ - சர்க்கரைவள்ளி கிழங்கு
-
5 டேபிள் ஸ்பூன் - நெய்
-
ஒரு கப் - நாட்டு சர்க்கரை
-
தேவையான அளவு - முந்திரி
-
தேவையான அளவு - பாதாம்
-
தேவையான அளவு - பிஸ்தா
செய்முறை
-
முதலில் குக்கரில் சர்க்கரைவள்ளி கிழங்கு சேர்த்து சற்று தண்ணீரும் சேர்த்து 4 விசில் வைத்து வேக வைக்கவும்.
- அடுத்து வேக வைத்து எடுத்த சர்க்கரைவள்ளி கிழங்கை மசித்து எடுக்கவும்.
- பின் ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்து வறுத்தெடுக்கவும்.
- அடுத்தாக அதே பாத்திரத்தில் நெய் சேர்த்து மசித்த சர்க்கரைவள்ளி கிழங்கு சேர்த்து கிளற வேண்டும்.
- பிறகு சர்க்கரைவள்ளி கிழங்கு ஒட்டாமல் பாத்திரத்தில் இருக்கும் போது சர்க்கரை சேர்த்து கிளறவும்.
- சர்க்கரையும் நன்றாக கரைந்தவுடன் வருத்து வைத்த பொருட்களை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
- சுமார் இரண்டு அல்லது மூன்று நிமிடம் வரை இந்த சர்க்கரைவள்ளி கிழங்கை நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
- தேவையானால் நெய் சற்று சேர்த்து கிளறவும். இப்படி செய்து எடுத்தால் சுவையான மற்றும் நாவில் வைத்தவுடன் கரையக்கூடிய சர்க்கரைவள்ளிக்கிழங்கு அல்வா தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US