தித்திக்கும் சுவையில் சர்க்கரைவள்ளி கிழங்கு பாயாசம்.., எப்படி தயாரிப்பது?
இந்த சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு பாயசத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் சர்க்கரைவள்ளி கிழங்கு பாயாசத்தை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சர்க்கரைவள்ளி கிழங்கு- 2
- நெய்- 2 ஸ்பூன்
- பால்- 1 கப்
- குங்கும பூ- 5 இதழ்
- சர்க்கரை- ½ கப்
- உப்பு- 1 சிட்டிகை
- ஏலக்காய் தூள்- ¼ ஸ்பூன்
- முந்திரி- 5
- உலர் திராட்சை- 5
செய்முறை
முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கை தோல் சீவி நன்கு கழுவி துருவி எடுத்துக்கொள்ளவும்.
பின் அடுப்பில் வாணல் வைத்து சூடானதும் நெய் சேர்த்து சூடானதும் துருவிய சர்க்கரைவள்ளி கிழங்கு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து பால் சேர்த்து சூடினாதும் அதில் வதக்கிய சர்க்கரைவள்ளி கிழங்கு சேர்த்து வேகவைக்கவும்.
இதைதொடர்ந்து அதில் குங்கும பூ, சர்க்கரை, உப்பு சேர்த்து கலந்து கொதிக்கவைக்கவும்.
நன்கு கெட்டியாகி வந்ததும் இதில் ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை சேர்த்து இறக்கினால் சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு பாயாசம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |