குதிரையில் சென்ற Swiggy டெலிவரி மேன்.! தகவல் தருபவர்களுக்கு வெகுமதி
மும்பை மழைக்கு மத்தியில் உணவு டெலிவரி செய்வதற்காக குதிரையில் சவாரி செய்த டெலிவரி பார்ட்னரை அடையாளம் காண உதவுமாறு நெட்டிசன்களை ஸ்விக்கி கேட்டுக் கொண்டுள்ளது.
உணவு டெலிவரி செயலியான Swiggy, ஒரு அசாதாரண பணிக்கு ரூ.5,000 வெகுமதியை வழங்குவதாக அறிவித்துள்ளது.
மும்பை மழைக்கு மத்தியில் உணவை டெலிவரி செய்வதற்காக குதிரையில் சவாரி செய்த டெலிவரி பார்ட்னரை அடையாளம் காண உதவுமாறு நெட்டிசன்களை அந்த மீறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இப்போது வைரலாகும் வீடியோவில் டெலிவரி ஏஜென்ட்டை நிறுவனத்தால் அடையாளம் காண முடியவில்லை.
காருக்குள் இருந்து படம்பிடிக்கப்பட்ட அந்த வீடியோவில், ஸ்விக்கி உணவு வழங்கும் பையுடன் ஒருவர் மும்பை சாலையில் குதிரையில் சவாரி செய்வதைக் காட்டுகிறது. பின்னால் இருந்து வீடியோ பதிவு செய்யப்பட்டதால் அந்த நபரை அடையாளம் காண நிறுவனம் தவறிவிட்டதாக தெரிகிறது.
வீடியோ வைரலானதை அடுத்து, ஸ்விக்கி, குதிரையில் செல்லும் அந்த டெலிவரி மேனை பற்றிய தகவலாய் கொடுக்குமாறு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நெட்டிசன்கள் மற்றும் உணவுப் பிரியர்கள் கவனத்திற்கு, அறியப்படாத ஒரு நபர், ஒரு உயிருள்ள வெள்ளை குதிரையில் (சிலை அல்ல) மிகவும் நம்பிக்கையுடன் அமர்ந்து, எங்கள் மோனோகிராம் செய்யப்பட்ட டெலிவரி பேக்கை எடுத்துச் செல்லும் சமீபத்திய வீடியோ, எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.
வீடியோவில் உள்ள நபரை அடையாளம் கண்டு தகவல் தெரிவிக்கும் முதல் நபருக்கு நன்றி கூறி, ஸ்விக்கி மனியில் ரூ. 5,000 வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.