10 நிமிடங்களில் ஸ்மார்ட்போன் டெலிவரி., புதிய முயற்சியில் Swiggy Instamart
Swiggy Instamart தனது ஸ்மார்ட்போன் டெலிவரி சேவையை இந்தியாவின் முக்கிய 10 நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் Apple, Samsung, OnePlus, Motorola, Oppo, Vivo, Realme மற்றும் Redmi போன்ற பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டுகளை 10 நிமிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கச் செய்ய உள்ளது.
எந்த நகரங்களில் கிடைக்கும்?
இந்த சேவை பெங்களூரு, டெல்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, புனே, நொய்டா, ஃபரிதாபாத் மற்றும் குருகிராம் ஆகிய 10 நகரங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கப்படும்.
எந்த மொடல்கள் கிடைக்கும்?
iPhone 16e, Samsung Galaxy M35, OnePlus Nord CE, Redmi 14C போன்ற புதிய ஸ்மார்ட்போன்கள் Swiggy Instamart வழியாக வழங்கப்படுகின்றன.
Swiggy Instamart தற்போது 100 நகரங்களுக்கு தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது, அதில் 2025-ல் மட்டும் 32 புதிய நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
Swiggy Instamart CEO-வின் கருத்து
Swiggy Instamart CEO அமிதேஷ் ஜா இதுகுறித்து கூறுகையில், "இந்திய நுகர்வோர் தங்கள் தேவைகளை நன்கு அறிந்தவர்கள். அவர்களின் விருப்பத்திற்கேற்ப, உடனடி மற்றும் உயர்தர டெலிவரி அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம்," என்றார்.
இந்த தன்னம்பிக்கையான முயற்சி இந்தியாவில் குவிக் காமர்ஸ் (Quick Commerce) துறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |