காதலனுடன் இரவு ஊர் சுற்ற சென்ற பிரபல ஒலிம்பிக்ஸ் வீராங்கனை: வெளியேற்றி ஊருக்கு அனுப்பி வைப்பு
ஒலிம்பிக் வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்து காதலனுடன் வெளியேறி ரகசியமாக ஊர் சுற்ற சென்ற பிரபல நீச்சல் வீராங்கனை ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இரவு நேர கொண்டாட்டங்களில்
பிரேசில் நாட்டவரான Ana Carolina Vieira என்ற நீச்சல் வீராங்கனையே விதிகளை மீறி, ரகசியமாக காதலனுடன் ஊர் சுற்ற சென்று அதிகாரிகளிடம் சிக்கியவர்.
22 வயதேயான இவர் 4X100m freestyle relay அணியின் உறுப்பினர். ஜூலை 27ம் திகதி இறுதிப்போட்டி முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதன் முந்தைய நாள் இரவு வியேரா மற்றும் அவரது காதலன் Gabriel Santos ஆகிய இருவரும் ரகசியமாக வெளியேறி பாரீஸ் நகர இரவு நேர கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தகவல் அறிந்து பிரேசில் ஒலிம்பிக் நிர்வாகம் வியேராவுக்கு அறிவுரை கூற முயன்ற நிலையில், அவர்களை மோசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வியேராவை உடனடியாக அணியில் இருந்து வெளியேற்றி, ஊருக்கு திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிகவும் கொண்டாடப்படும்
கேப்ரியல் சாண்டோஸும் ஆடவர்களுக்கான 4X100m freestyle நீசால் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் மன்னிப்புக் கோரியதை அடுத்து தண்டனையில் இருந்து தப்பியுள்ளார்.
வியேரா மற்றும் சாண்டோஸ் இணை பிரேசில் நாட்டில் மிகவும் கொண்டாடப்படும் விளையாட்டு வீரர்கள் என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, வியேரா சிறு வயதில் இருந்தே நீச்சலில் தமது திறமையை நிரூபித்தவர் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |