நீச்சல் வீரர்களை கடலுக்குள் இழுத்து சென்ற ராட்சத அலை: டெனெரிஃப் கடற்கரையில் பரபரப்பு
ஸ்பெயின் நாட்டு கடற்கரையில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி 4 நீச்சல் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
வீரர்களை இழுத்து சென்ற ராட்சத அலை
ஞாயிற்றுக்கிழமை டெனெரிஃப்(Tenerife) கடற்கரையில் உள்ள இஸ்லா காங்ரெஜோ(Isla Cangrejo) என்ற நீச்சல் பகுதியில் எழுந்த ராட்சத அலை ஒன்று அங்கு நின்றிருந்த நீச்சல் வீரர்கள் குழு ஒன்றை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

இதில் 4 பேர் வரை உயிரிழந்து இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதுடன் ஒருவர் காணாமல் போயிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து, ஹெலிகாப்டர்கள் மற்றும் ஜெட் ஸ்கீக்களைப் பயன்படுத்தி அதிகாரிகள் பெரிய அளவிலான மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
முதல் கட்ட மீட்பு பணிகளில் 3 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், நான்காவதாக ஒரு பெண் மீட்கப்பட்டார். இருப்பினும் சம்பவத்திற்கு அடுத்த நாள் அவரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

உயிரிழந்த நீச்சல் வீரர்களின் பெயர்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.
நீச்சல் வீரர்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட போது அப்பகுதியில் கடல் கொந்தளிப்புக்கான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |