பாரீஸ் Seine நதியில் நீச்சல் போட்டி... தங்கம் வென்றவர் மருத்துவமனையில் அனுமதி
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக தங்கம் வென்றுள்ள நீச்சல் வீரர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீச்சல் போட்டியில் தங்கம்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 800m freestyle நீச்சல் போட்டியில் தங்கம் வென்றவர் அயர்லாந்து நாட்டவரான Daniel Wiffen. இவரே தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கம் மட்டுமின்றி, 1500m freestyle போட்டியில் வெங்கலம் வென்றிருந்தார். அத்துடன் Seine நதியில் முன்னெடுக்கப்பட்ட போட்டியிலும் இவர் கலந்து கொண்டார். வெறும் 23 வயதேயான Wiffen அயர்லாந்து சார்பில் நீச்சல் போட்டியில் தங்கம் வெல்லும் முதல் நபராவார்.
இதனாலையே, நிறைவு விழாவின் போது அயர்லாந்து கொடியை ஏந்தும் பெருமை பெற்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நிறைவு விழா துவங்கும் சில மணி நேரம் முன்னர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.
குணமடைந்து வருவதாக
Seine நதியில் முன்னெடுக்கப்பட்ட போட்டிகளில் கலந்துகொண்ட வீரர்களுக்கு ஏற்பட்ட அதே பாதிப்பே இவருக்கும் ஏற்பட்டுள்ளது. மிகவும் மாசு படிந்த நிலையில் காணப்பட்ட Seine நதியை சுத்தப்படுத்த 1.2 மில்லியன் பவுண்டுகள் செலவிட்டும் பயனில்லாமல் போனது என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள Daniel Wiffen, உடல நலம் குன்றியதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது குணமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |