சுவிட்சர்லாந்தின் புலம்பெயர்தலுக்கு எதிரான வாக்கெடுப்பு: காத்திருக்கும் பிரச்சினைகள்
சுவிட்சர்லாந்தின் புலம்பெயர்தலுக்கு எதிரான வாக்கெடுப்பு வெற்றி பெறுமானால், அதனால் சுவிஸ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும் என எச்சரிக்கிறது ஆய்வொன்று.
புலம்பெயர்தல் எதிர்ப்பு பிரேரணை
சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) எனக்கூறும் ஒரு பிரேரணையை முன்வைத்துள்ளது.
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அதாவது, நாட்டுக்குள் புலம்பெயர்ந்தோரை அனுமதிப்பதன் மூலம் நாட்டின் மக்கள்தொகையை பெருகவிடக்கூடாது என்னும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள அந்த பிரேரணை தொடர்பில், ஜூன் மாதம் 14ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
காத்திருக்கும் பிரச்சினைகள்
இந்நிலையில், அப்படி இந்த பிரேரணை வெற்றி பெறுமானால், சுவிட்சர்லாந்து ஷெங்கன் பகுதியிலிருந்து வெளியேற்றப்படலாம் என்றும், அதனால், அண்டை நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் ஒவ்வொரு எல்லையிலும் எல்லை சோதனைகளை அறிமுகம் செய்யக்கூடும் என்றும், Ecoplan என்னும் ஆய்வமைப்பு எச்சரிக்கிறது.
அப்படி எல்லா எல்லைகளிலும் சோதனைகள் அறிமுகம் செய்யப்படும் நிலையில், எல்லை தாண்டி பணிக்குச் செல்வோர் பாதிக்கப்படுவார்கள்.
குறிப்பாக, ஜெனீவா, டிஷினோ மற்றும் பாஸல் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்படும். இந்த மாகாணங்களிலிருந்து தினமும் சுமார் 400,000 பணியாளர்கள் தினமும் எல்லை தாண்டி பணிக்குச் செல்கிறார்கள்.
ஆக, இத்தனை பேர் எல்லை தாண்டி பணிக்குச் செல்லும் நிலையில், அனைத்து எல்லைகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படுமானால், மக்கள் குறைந்தது ஒரு மணி நேரம் எல்லைகளில் காத்திருக்க நேரிடும்.
ஆகவே, அண்டை நாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு பணிக்கு வருவோரில் மூன்றில் இரண்டு பங்கு பணியாளர்கள் சுவிட்சர்லாந்துக்கு பணிக்கு வருவதைக் கைவிடக்கூடும்.
அப்படி அந்த அளவுக்கு பணியாளர்கள் பணிக்கு வருவதை நிறுத்துவார்கள் என்றால், சுவிஸ் மருத்துவமனைகள் மற்றும் சில சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும். அதனால், சுவிஸ் பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |