சுவிஸ் நகரமொன்றில் குவிக்கப்படும் ராணுவம்: பின்னணி
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுவருகிறார்கள்.
பின்னணி
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இம்மாதம் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடைபெற உள்ளது.

Credit : AP
கூட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உட்பட பல தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
ஆகவே, பாதுகாப்புக்காக ராணுவத்தைக் களமிறக்கியுள்ளது சுவிட்சர்லாந்து.
கடந்த ஆண்டில் 4,400 ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு, 5,000 ராணுவ வீரர்கள் பல்வேறு வகையான பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.
Credit : Keystone SDA
மேலும், டாவோஸில் கூட்டம் நடைபெறும் நேரத்தில், வான்வெளியை பயன்படுத்தவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
குறிப்பாக, இம்மாதம் 19ஆம் திகதி காலை 8.00 மணி முதல் 24ஆம் திகதி மாலை 5.00 மணி வரையில், விமானங்கள், ட்ரோன்கள், கிளைடர்கள் மற்றும் பாராகிளைடர்கள் ஆகியவற்றை எப்போது பறக்க அனுமதிக்கலாம் என்பது குறித்து Graubünden மாகாண பொலிசார் முடிவு செய்வார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |