சுவிட்சர்லாந்தில் இதுவரை இல்லாத அளவில் பிறப்பு வீதம் வீழ்ச்சி
சுவிட்சர்லாந்தில், இதுவரை இல்லாத அளவில் பிறப்பு வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக ஃபெடரல் புள்ளியியல் அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
பிறப்பு வீதம் கடும் வீழ்ச்சி
சுவிட்சர்லாந்தில், பிறப்பு வீதம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 2024ஆம் ஆண்டில், குழந்தை பிறப்பு வீதம் சராசரியாக 1.29 ஆக உள்ளது. +

பணிச்சுமை காரணமாக குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதியர் தாமதிப்பது மட்டுமின்றி, 20 முதல் 29 வயது வரையுள்ளவர்களில் 10 சதவிகிதத்தினர் வரை தங்களுக்கு குழந்தை வேண்டாம் என முடிவு செய்துள்ளதும் இந்த வீழ்ச்சிக்குக் காரணமாகும்.
ஐரோப்பாவுடன் ஒப்பிடும்போது, ஸ்பெயின் மற்றும் இத்தாலியுடன் சுவிட்சர்லாந்திலும்தான் குழந்தை பிறப்பு வீதம் இந்த அளவுக்கு குறைவாக உள்ளது.
குழந்தை பிறப்பு வீதம் குறைது வருவதுடன், முதியோரும் மரணமடையும் நிலையில், அது எதிர்காலத்தில் பணியாளர் பற்றாக்குறை முதல் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |