பின்வாங்கியது சுவிஸ்... ஸ்பெயினின் முன்னாள் மன்னருக்கு எதிரான ஊழல் வழக்கில் முக்கிய திருப்பம்
ஸ்பெயின் முன்னாள் மன்னருக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணையிலிருந்து சுவிஸ் பின்வாங்கியுள்ளது.
ஸ்பெயினின் முன்னாள் மன்னர் Juan Carlos எதிரான ஊழல் வழக்கை சுவிஸ் வழக்கறிஞர்கள் முடித்து வைத்தனர்.
சவுதி அரேபியாவில் அதிவேக ரயில் ஒப்பந்தத்தை ஸ்பானிய கூட்டமைப்புக்கு வழங்கியதற்காக 100 மில்லியன் டொலர் லஞ்சம் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் ஸ்பெயின் முன்னாள் மன்னர் Juan Carlos மீது வழக்கு விசாரணையை சுவிஸ் முன்னெடுத்தது.
இந்த வழக்கில், Juan Carlos-யிடம் இருந்து நிதி பரிமாற்றத்தை நிர்வகித்ததற்காக அல்லது அதில் பங்கேற்றதற்காக நான்கு பேர் மீது பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டன.
ஜெனிவாவில் உள்ள மன்னரின் சொத்துகளை நிர்வாகிக்கும் Arturo Fasana, ஜெனீவாவில் உள்ள அவரது வழக்கறிஞர் Dante Canonica, மன்னரின் முன்னாள் காதலி Corinna Larsen மற்றும் மிராபாட் வங்கி மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில், ஸ்பெயின் முன்னாள் மன்னருக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணை முடித்து வைப்பதாக சுவிஸ் நீதிமன்றம் திங்களன்று அறிவித்துள்ளது.
தற்போது குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஜெனிவா சட்டமா அதிபர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், சவுதி அரேபியாவிலிருந்து பெறப்பட்ட தொகைக்கும் அதிவேக ரயிலை உருவாக்கும் ஒப்பந்தத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதாக அதன் விசாரணையால் நிறுவ முடியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.