பிரித்தானிய இளவரசர் பிலிப் மரணத்துக்கு சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
பெரும்பாலான உலக நாடுகளின் தலைவர்கள், பிரித்தானியா இளவரசரும், பிரித்தானிய மகாராணியாரின் கணவருமான இளவரசர் பிலிப்பின் மரணத்துக்கு இரங்கல் செய்திகளைத் தெரிவித்தவண்ணம் உள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தும் தன் பங்குக்கு இளவரசர் பிலிப் மரணத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளது.
சுவிஸ் ஜனாதிபதி Guy Parmelin வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இளவரசர் பிலிப்பின் மரண செய்தி அறிந்து கவலையடைந்தேன், கணவரை இழந்து வாடும் மரியாதைக்குரிய எலிசபெத் மகாராணிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் சார்பாகவும், சுவிஸ் மக்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
C’est avec tristesse que j’ai appris le décès du Prince Philip, duc d’Edimbourg. Pendant de longues années il a été une présence rassurante et empreinte d'humour pour la population du Royaume-Uni. Mes pensées et celles du peuple suisse vont à la reine Elisabeth et à sa famille. pic.twitter.com/RYWX2invlo
— Guy Parmelin (@ParmelinG) April 9, 2021