தூதரக அதிகாரிகளின் மகளுக்கே குடியிருப்பு அனுமதி அளிக்க மறுத்த சுவிஸ் நீதிமன்றம்
கென்யா நாட்டு தூதரக அதிகாரிகளின் மகளான ஒரு இளம்பெண், தன் வாழ்நாள் முழுவதுமே சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த நிலையிலும், அவருக்கு குடியிருப்பு அனுமதி வழங்க சுவிஸ் அரசு மறுத்துவிட்டது.
காரணம் என்ன?
அதாவது, சில குறிப்பிட்ட தூதரக பணிகளில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பணிக்காலத்தில் சுவிட்சர்லாந்தில் தங்கியிருப்பதற்காக, legitimation card என்னும் ஒரு அனுமதி அட்டை வழங்கப்படும்.
சுவிட்சர்லாந்தில், ஐ.நா அமைப்பின் சார்பில் பணியாற்றிய கென்ய தூதரக அதிகாரிகளான ஒரு தம்பதியரின் மகளுக்கும் இந்த அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 17 வயதான அந்தப் பெண், 2017ஆம் ஆண்டு சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுவிட்டது.
ஆகவே, அவர் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளார். அவர் வாழும் Vaud மாகாணம் அவருக்கு உதவ முடிவு செய்த நிலையிலும், 2021ஆம் ஆண்டு, புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
அவர் ஃபெடரல் நிர்வாக நீதிமன்றத்தில் முறையீடு செய்த நிலையில், தற்போது, நீதிமன்றமும் அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
அவருக்கு legitimation card கொடுக்கப்பட்டதால், வெளிநாட்டவர்கள் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளுக்கு அவர் தகுதிபெறமாட்டார் என்று கூறி நீதிமன்றம் சுவிஸ் மாகாணச் செயலகத்தின் முடிவு சரியே என்று கூறிவிட்டது.
தூதரக அதிகாரிகளின் மகள் என்னும் முறையில், அவர் சிறப்பு சலுகையின் கீழ் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த காலகட்டம், ஒருவர் குடியிருப்பு அனுமதி கோருவதற்காக சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த காலகட்டமாக கருதப்படாது என நீதிமன்றம் கூறிவிட்டது.
கென்யா நாட்டவர்களைப் பொருத்தவரை, அவர்கள் சுவிஸ் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு 10 ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |