பசுக்களிடையே பரவும் மர்ம நோய்: சுவிஸ் விவசாயிகளுக்கு மேலும் ஒரு அடி
ஆல்ப்ஸ் மலையில் மாடுகளுக்கு சரியான மேய்ச்சல் இல்லாததால் ஏற்கனவே பல விவசாயிகள் இழப்பை எதிர்கொண்டுவரும் நிலையில், தற்போது பசுக்களிடையே பரவிவரும் மர்ம நோய் ஒன்று பிரச்சினையை அதிகமாக்கியுள்ளது.
பசுக்களிடையே பரவும் மர்ம நோய்
பல விவசாயிகள், தங்கள் பசுக்களுக்கு காய்ச்சலும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளதாகவும், பசுக்கள் கொடுக்கும் பாலின் அளவு குறைந்துள்ளதாகவும் புகார் தெரிவித்து வருவதாக, சுவிஸ் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

விடயம் என்னவென்றால், என்னவென்றே தெரியாத ஒரு காய்ச்சல் அல்லது வயிற்றுபோக்கு பசுக்களுக்கு ஏற்படுமானால், அது பயங்கர தொற்றுநோய் ஒன்றின் அறிகுறியாக இருக்கலாம் என்பதே அச்சத்தையூட்டும் விடயம்!
சுவிஸ் அதிகாரிகள், பசுக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த மர்ம நோய் என்ன என்பதைக் கண்டறியும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். ஆக, ஏற்கனவே நஷ்டத்தை எதிர்கொண்டுள்ள சுவிஸ் விவசாயிகளுக்கு மீண்டும் ஒரு பிரச்சினை உருவாகியுள்ளது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |