சுவிட்சர்லாந்தில் துவங்கியுள்ள பனிப்பொழிவு: அபாயம் என்று கூறும் அறிவியலாளர்கள்!
Early snowfall after scorching summer poses risks to mountain regions: சுட்டெரிக்கும் வெயிலைத் தொடர்ந்து சீக்கிரமே துவங்கிவிட்ட பனிப்பொழிவால் அபாயம் ஏற்படலாம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
சுவிஸ் ஆல்ப்ஸ் மலைகளில் பனிப்பொழிவு துவங்கிவிட்டது. சுற்றுலாப்பயணிகளுக்கும் பனிச்சறுக்கு ரிசார்ட் உரிமையாளர்களுக்கும் மகிழ்ச்சிதான்.

ஆனால், இந்த பனிப்பொழிவால் அபாயம் ஏற்படலாம் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
சீக்கிரமே துவங்கிவிட்ட பனிப்பொழிவால் அபாயம்
உலக நாடுகள் பல, எல் நினோவின் தாக்கத்தால் கடந்த பல மாதங்களாக சுட்டெரிக்கும் வெயிலால் அவதியுற்றுவந்ததை யாரும் மறக்கமுடியாது.

இந்நிலையில், சில நாடுகளில், குறிப்பாக மலைப்பகுதிகளில் இப்போது பனிப்பொழிவு துவங்கியுள்ளது.
ஆக, சுட்டெரித்த வெயிலுக்குப் பின் பனி பெய்தால் நல்லதுதானே என நாம் நினைக்கலாம்.
விடயம் என்னவென்றால், அதில் ஒரு அபாயம் உள்ளதாம். அதாவது, நிலம், இயற்கையாக, மெதுவாக குளிர்ச்சி அடையவேண்டும்.
அப்படி இல்லாமல், நிலத்தின் சூடு தணியாமல் இருக்கும்போதே பனி பெய்யுமானால், அந்தப் பனி ஒரு அடுக்காக நிலத்துக்கு மேல் படர்ந்திருக்கும்.
ஆனால், நிலத்தின் வெப்பம் இயற்கையாக தணியாததால், நிலத்தை பனி தொடும் இடத்தில் வெப்பம் குறைந்திருக்காது. இப்போது அந்த இடத்தில் பனி பெய்து ஒரு படலத்தை உருவாக்கிவிட்டதால், நிலத்தின் வெப்பம் தானாக தணியவும் வாய்ப்பில்லை.
ஆக, நிலத்தின் மேல் உருவாகியுள்ள பனிப்படலம், நிலத்துடன் உறுதியாக இணைந்திருக்கவில்லை. ஆகவே, புல் அடந்த பகுதிகள், பாறைகள் போன்ற வழுவழுப்பான சில இடங்களில் இந்த பனிப்படலம் பனிப்பாறைச்சரிவை உண்டாக்கும் அபாயம் உள்ளது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.