ஊதிய உயர்வு கேட்க தயங்கும் சுவிஸ் நாட்டவர்கள்
ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ளவர்களைப் போலில்லாமல், சுவிஸ் நாட்டவர்கள் ஊதிய உயர்வு கேட்க அதிகம் தயங்குவதாக சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
ஊதிய உயர்வு கேட்க தயங்கும் சுவிஸ் நாட்டவர்கள்
Michael Page என்னும் அமைப்பு சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றில், சுவிஸ் பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்க அதிகம் தயக்கம் காட்டுவதாக தெரியவந்துள்ளது.
விடயம் என்னவென்றால், அப்படி கேட்டாலும், கேட்பவர்களுக்கு முழுமையான வெற்றி கிடைப்பதில்லையாம்.
கடந்த 12 மாதங்களில், 35 சதவிகித சுவிஸ் பணியாளர்கள் மட்டுமே ஊதிய உயர்வு கோரியுள்ளார்கள்.
அவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு மட்டுமே ஊதிய உயர்வு கிடைத்துள்ளது.
அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திலோ, 50 சதவிகித பணியாளர்கள் ஊதிய உயர்வு கோரியுள்ளார்கள், அவர்களில் பாதி பேருக்கு ஊதிய உயர்வு கிடைக்கவும் செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |