கருணைக்கொலை செய்த மருத்துவர் மீது கொலைக்குற்றச்சாட்டு... தீர்ப்பை மாற்றி எழுதிய நீதிமன்றம்
சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலைக்கு உதவிய மருத்துவர் ஒருவர் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆனால், அவரை நீதிமன்றம் ஒன்று விடுவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை சட்டப்படி குற்றமல்ல.
அப்படியிருக்கும் சூழலில், தனது 60 வயதுகளிலிருந்த மன நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை கருணைக்கொலை செய்ய உதவியுள்ளார் பேசல் மருத்துவர் ஒருவர். 2019இல் அவர் மீது கொலைக்குற்றம் சாட்டப்பட, நீதிமன்றம் ஒன்று அவரை விடுவித்தது.
ஆனால், தற்போது மீண்டும் அந்த தீர்ப்பை மாற்றி, அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்து, அவருக்கு தண்டனை விதிக்க மேல் முறையீட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளார்கள் சட்டத்தரணிகள்.
அந்த பெண்ணுக்கு கருணைக்கொலைக்கு உதவும் முன், அவர் மன நல ஆலோசகர்களின் கருத்தை கேட்டிருக்கவேண்டும் என அவர்கள் வாதிட்டார்கள். ஆனால், அந்த பெண்ணின் மன நலனைப் பொருத்தவரை, அது அவசியம் இல்லை என கூறிய நீதிமன்றம், அந்த மருத்துவரை தண்டிக்க மறுத்துவிட்டது.
அவர் மீது கருணைக்கொலைக்காக பயன்படுத்தப்பட்ட மருந்துகளுக்காக அபராதமும் 15 மாத சிறைத்தண்டனையும் கோரப்பட்ட நிலையில், மேல்முறையீட்டை நிராகரித்த மேல் முறையீட்டு நீதிமன்றம், அவரது சிறைத்தண்டனையை ரத்து செய்துவிட்டது.
அத்துடன் மருந்துகள் பயன்பாடு தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த அபராதத்தையும்
குறைத்துள்ளது நீதிமன்றம்.