சுவிட்சர்லாந்தில் இறைச்சி கூடங்களை தவிர்க்கும் 250 பண்ணைகள்: கால்நடைகளின் மன அழுத்தத்தை குறைக்குமா?
சுவிஸ் நாட்டில் கால்நடை வளர்ப்பில் முக்கிய மாற்றமாக வளர்ப்பு கால்நடைகளை பண்ணையிலேயே வெட்டுவது, கால்நடைகளின் மன அழுத்தத்தை குறைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இறைச்சி கூடங்களை தவிர்க்கும் 250 பண்ணைகள்
சுவிட்சர்லாந்தில் பாரம்பரிய இறைச்சிக் கூடங்களுக்கு எடுத்துச் செல்வதை விட, சொந்த பண்ணைகளிலேயே கால்நடைகளை வெட்டுவதை சுவிட்சர்லாந்தில் சுமார் 250 பண்ணைகள் பின்பற்றி வருகின்றன.
இது விலங்குகளுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் முறையாக விவசாயிகள் நம்புகின்றனர்.
இந்த முறை சிக்கலானதாக இருந்தாலும், கால்நடை வளர்ப்பில் இது ஒரு முக்கிய மாற்றமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு முதல், சுவிட்சர்லாந்தில் பண்ணையிலோ அல்லது மேய்ச்சல் நிலத்திலோ கால்நடைகளை வெட்டுவதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது ஒரு சிறப்பு சந்தையை உருவாக்கியுள்ளது. ஃபிரிக் (AG) இல் உள்ள கரிம விவசாய ஆராய்ச்சி நிறுவனம் (FiBL), சுமார் 250 பண்ணைகள் இந்த முறையைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறது.
பழகிய சூழலில் மன அழுத்தத்தை குறைத்தல்
கால்நடைகளை உணவளிக்கும் போது அவற்றின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் சிறப்பு தீவன வேலிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
அவை அசையாமல் ஆனவுடன் துப்பாக்கி மூலம் மயக்கப்படுகின்றன. பன்றிகளுக்கு மின்சார அதிர்ச்சி அளிக்கப்படுகிறது.
மயக்கமடைய வைத்த பிறகு, உடனடியாக கால்நடைகளின் ரத்தங்கள் வெளியேற்றப்படுகிறது.
பின், பதப்படுத்துவதற்காக உடல்கள் இறைச்சி கூடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
நேரடி விற்பனை சந்தை வளர்ச்சி
FiBL இன் கூற்றுப்படி, நேரடி விற்பனையைச் சார்ந்திருப்பதால், பண்ணையில் கால்நடைகளை வெட்டும் முறையின் வளர்ச்சி மிதமாகவே உள்ளது.
சில்லறை விற்பனையாளர்கள், உணவகங்கள் மற்றும் நிறுவன வாங்குவோர் போன்ற முக்கிய விநியோக வழிகள் தற்போது இந்த வகை இறைச்சியில் குறைந்த ஆர்வத்தையே காட்டுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |